பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 17) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிய இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பிற்பகல் மோதவுள்ளன.
இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து மற்றும் மேற்கந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.குழு 1 இன் நாளைய போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.குழு 2 இல் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் எதிர்த்தாடவுள்ளது.
சூப்பர் 12 போட்டிகள் குழு 1 மற்றும் குழு 2 என பிரிக்கப்பட்டுள்ளது.குழு 1 இல் இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இத் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்று நிறைவடைந்துள்ளது.அதற்கமைய முதலாம் சுற்றின் குழு ( ஏ)யிலிருந்து இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.குழு B யிலிருந்து ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவாகியுள்ளன.
நாளைய தினம் (24) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.