T20 உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று முதல்!

Date:

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 17) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிய இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.அதற்கமைய சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பிற்பகல் மோதவுள்ளன.

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ‌இங்கிலாந்து மற்றும் மேற்கந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.குழு 1 இன் நாளைய போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.குழு 2 இல் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் எதிர்த்தாடவுள்ளது.

சூப்பர் 12 போட்டிகள் குழு 1 மற்றும் குழு 2 என பிரிக்கப்பட்டுள்ளது.குழு 1 இல் இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இத் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்று நிறைவடைந்துள்ளது.அதற்கமைய முதலாம் சுற்றின் குழு ( ஏ)யிலிருந்து இலங்கை மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.குழு B யிலிருந்து ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவாகியுள்ளன.

நாளைய தினம் (24) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...