“அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

Date:

“அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்து சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன இன்னமும் பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப்பெற்றுக்கொடுப்பதே. அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளதென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலுக்கு மத்தியில், மூத்த தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்த கலந்துரையாடல்கள், திட்டமிடல் நடவடிக்கைகளின் ஊடாக, இன்று சாதகமான பலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக, முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...