இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

Date:

இன்று (28) காலை காத்தான்குடியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைதி செய்யப்பட்டுள்ளதாகவும் , உயிரிழந்த இளைஞன் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது ஆதம்பாவா முஹம்மத் அம்ஹர் என்பவராவார்.

பொலிஸார் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், 

கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சம்பவ தினமான இன்று ( 28) அதிகாலை 5.30 மணிக்கு பயணித்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் இருந்த மற்ற நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...