சிரேஷ்ட ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸின் மகளும், பேருவளை சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலையின் தரம் 2 மாணவியுமான ஆமினா ரூமியின் “காயத்தின் கீறல்கள்” சித்திரக் கண்காட்சி இன்று (01) பேருவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அரும்பு சஞ்சிகை ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன், சிறுவர் வைத்தியர் மர்ஜான் ஹூஸைன். பேருவளை சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீலா. வகுப்பாசிரியை திருமதி பாஹிமா. பேருவளை க்ரோன் இட்டர்நெஷனல் சிறுவர் பாடசாலையின் பணிப்பாளர் ஹிஷாம் கரீம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஏழு வயது நிரம்பிய சிறுமி ஆமினா ரூமி இரண்டு வயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். வெகுவிரைவில் அவருக்கான சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெறவுள்ள நிலையில் வீட்டிலிருந்தும், வைத்தியசாலையிலிருந்தும் ஆமினா வரைந்த ஓவியங்கள் இச்சித்திர கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் நோய்வாய்ப்பட்டுள்ள ஆமினா விரைவில் பூரண குணமடைய வேண்டுமென ஆசி வேண்டி அஷ்ஷெய்க் பாஸில் அஷ்ரபியினால் விசேட பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.