இலங்கை டி-20 உலகக்கிண்ண அணியில் மேலும் ஐந்து வீரர்கள்

Date:

டி-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில், மேலதிகமாக ஐந்து வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் அஷென் பண்டார ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முன்னதாக செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு மதுசங்க, காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அணியுடன் அவர் இணைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தசுன் சானக தலைமையிலான அணியில், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்க, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, மகேஷ் தீக்ஷன, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலதிக வீரர்களாக லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓமானுக்குப் புறப்படவுள்ளது. அங்கு தனது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...