இலங்கையை முதன்மைப்படுத்தி வசிப்பிட தினம் சர்வதேச அளவில் புத்துணர்ச்சி பெற்றதற்கு காரணம் ரணசிங்க பிரேமதாசா அவர்களே!! -நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்!

Date:

ஓக்டோபர் மாதம் முதலாவது திங்கட் கிழமை உலக வசிப்பிட தினமாக அறிவிக்கப்படுவதாக 1985 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்தார்கள். அவரின் பிரேரணைக்கு அமையவே உலக வசிப்பிட தினம் ஆரம்பமாகியது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற இன்றைய (04) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

இலங்கையை முதன்மைப்படுத்தி வசிப்பிட தினம் சர்வதேச அளவில் புத்துணர்ச்சி பெற்றது.

தலைக்கொரு வீடு மனதுக்கு நிம்மதி (ஹிசட ஹெவனக் சிதட செவனக்) எனும் வேலைத்திட்டத்தை பிரேமதாச அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அது வீடமைப்போடு இணைக்கப்பட்ட சமூக அபிவிருத்தியாக முன்னெடுக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுக்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். அதை விரிவாக செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சுற்றாடல், வீடமைப்பு, நகர அபிவிருத்தி என பல்வேறு அமைச்சுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதோடு வீடமைப்பு அதிகார சபையும் ஸ்தாபிக்கப்பட்டது. அத்தோடு நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றாடல் அதிகார சபை, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நிறுவினார்.

அன்று அனைத்து மாவட்டங்களிலும் கம்முதாவ வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது அனைத்து பிரதேச செயலகங்களிலும் 10 வார வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தமை எனக்கு நினைவிருக்கின்றது. மாகாண அமைச்சுக்களை ஒன்றாக இனைத்து வீடமைப்பு வாரம், சுற்றாடல் வாரம், தபால் வாரம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாரத்தை ஏற்படுத்தினார்.

சஜித் பிரேமதாச அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது 1989 ஆம் ஆண்டு இந்த உலக வதிவிட தினத்தில் 100 வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இன்றுள்ள வீடமைப்பு அமைச்சு என்ன செய்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பில் நான் கதைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. கவலையான ஒரு விடயம் தான். இன்றைய தினம் உலகிற்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு தினம்.

வீடு வழங்கப்பட்டால் அனைத்தும் வழங்கப்பட்டமைக்கு சமமாகும் எனும் புத்தபெருமானின் கூற்றை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன். மக்களின் உணர்வுபூர்வமான தேவைகளுக்கு பதிலளிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்கள் இந்த மண்ணில் அல்ல வேறு ஒரு உலகத்தில் வாழ்கின்றார்கள். இன்று நாட்டில் உள்ள பிரபலமான ஊடகவியலாளர்களை வேட்டையாட ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவிடத்து அடக்குமுறையே அவர்களின் பதிலாக மாறிக்கொண்டிருக்கின்றது.

லங்காதீப பத்திரிகையின் பிரதான அலுவலகத்திற்கு பொலிஸாரை அனுப்புகின்றார்கள். பொலிஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்ட எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் சஜித் பிரேமதாச அவர்களுக்கோ ஐக்கிய மக்கள் சக்திக்கோ உதவி செய்தவர்கள் அல்ல. அவர்கள் பிரபலமான ஊடகவியலாளர்கள். நாட்டு மக்களின் பணத்தை அரசாங்கம் தவறாக கையாள்கின்ற போது அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்ற போது அவர்கள் பக்கம் விரல் நீட்டப்படுகின்றது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அச்சுறுத்துகின்றார்கள்.

தற்போது பொலிஸாரை கேவலப்படுத்துகின்றார்கள். நாம் பொலிஸாருக்கு சொல்லவில்லை என்று கூறி சிறு பிள்ளைகளை ஏமாற்றுவது போன்று எமாற்ற நினைக்கின்றார்கள். அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு மக்கள் சிறந்த முறையில் தண்டனை வழங்கியுள்ளார்கள் இந்த ஆட்சியாளர்கள் இதை நன்றாக நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

அரசியல் நோக்கத்தை நிறைவுசெய்து கொள்வதற்காக பொலிஸாரையும் இராணுவத்தினரையும் சில்லரை வேலைகளுக்கு இந்த அரசாங்கம் பயன்படுத்திக்கொள்கின்றது. பொலிஸாரினதும், இராணுவத்தினரினதும் அரச சேவையினதும் கௌரவத்தை பாதிக்கின்ற வகையில் செயற்பட இடமளிக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இவற்றின் முக்கிய பொறுப்பு மக்கள் வசமே இருக்கின்றது.

ஆனந்தாக் கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஒரு முறை பரிசளிப்பு விழாவின் போது எனக்கு முன்னாள் சென்ற மாணவர் குணிந்து இடுப்பை வளைத்து பரிசைப் பெற முயன்ற போது எனது அதிபர் சொன்னார் யாருக்கும் விழுந்து வணங்க வேண்டாம் அவர்களை கௌரவப்படுத்துவதற்கு சற்றுக் குனிந்து தலை சாய்த்தால் போதுமானது என்று. இந்த நாட்டில் உள்ள சிவில் அதிகாரிகள்,இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு நான் சொல்கின்ற விடயம் என்னசென்றால் நீங்கள் வாழ்வது ஜனநாயக நாட்டில் எனவே யாருக்குத் தலைசாய்க்க வேண்டாம்.

இந்த நாட்டு மக்களும் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர வைப்பதற்கு பாடுபட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கவலையடைந்து போயுள்ளார்கள். எதிர்பபை வெளியிடுகின்ற அளவுக்கு மாறியுள்ளார்கள்.
இன்று மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது இன்று பால் எடுப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் வரிசையில் இருக்க வேண்டியுள்ளது, அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. உரம் இல்லாமையால் விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளது. மரக்கறி, பூ என பல்வேறு உற்பத்திகளை மேற்கொள்கின்ற விவசாயிகள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் மக்கள் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமாக சிந்திக்கின்றதா?

மூன்று வேளைகளுக்கு பதிலாக இரண்டு வேளைகள் உணவு உண்ணுமாறு ஒரு உறுப்பினர் கூறுகின்றார். தமது மேலதிகாரிகளின் குரலைத் தான் இந்த உறுப்பினர்கள் வெளியிடுகின்றார்கள். 1989 இல் உலகில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் தான் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியானர். அந்த சந்தர்ப்பத்தில் வடக்கும் கிழக்கும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. பற்றி எரிந்த நாட்டை பொறுப்பேற்ற அவர் வாழ்வாதாரத்திற்காக 2000 ரூபா வீதம் வழங்கினார். பாடசாலை சீருடை, பகலுணவு, ஆடைத் தொழிற்சாலைகள் என பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினார். பொருத்துக்கொள்ள முடுடியுமானவர்களுக்கு தான் அர்பணிக்க சொல்ல முடியும் அடிமட்டத்தில் இருக்கின்ற மக்களால் அர்ப்பணிக்க முடியாது. இந்த அரசாங்கம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்கின்ற வியாபாரிகளுக்கு வரிச் சலுகை கொடுத்தார்கள். அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமோ இலக்கோ இல்லை. நாளுக்கு நாள் வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்து ஒவ்வொரு நாளும் அதை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்தியவசிய பொருட்களுக்கான ஆணையாளர் ஒருவரை நியமிக்கின்றார்கள் இதில் எந்தவொரு பலனும் இல்லை இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத போது ஏதாவது ஒரு விடயத்தை பூதகராமக்கி அதில் குளிர் காய முற்படுகின்றனர். ஒரு காலம் கத்தோலிக்க பிரச்சினை, தமிழர் பிரச்சினை, முஸ்லீம்களின் பிரச்சினை. தற்போது காதினல் அவர்களை இலக்காக வைத்து கத்தோலிக்க பிரச்சினை ஒன்றை உருவாக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பிரச்சினைகளை உருவாக்குவதற்கு ஆரம்பத்தில் பயன்படுத்திய கிளைகள் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்கள். தொடர்ந்து இவ்வாறு பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு செல்ல முடியாது. தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்க முடியாது,எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பொய்க்கான காலம் குறைவு. அடக்கு முறையின் ஊடாக வாழ்க்கை நடாத்த முடியும் என்று இவர்கள் நம்புகின்றார்கள். இவற்றை சரியாக புரிந்துகொள்ளுங்கள் என்பதை மக்களிடம் கேட்டுக்காள்கின்றேன்.
ஜே.ஆர் ஜயவர்தன ஊடகங்கள் எதனையும் அரசாங்கத்தின் பக்கம் ஈர்த்துக்கொள்ள வில்லை. அரச ஊடகங்களும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடகங்களும் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்களை தெரிந்து உணர்ந்து செயற்படுமாறு மக்களிடம் வேண்டிக்கொள்கின்றேன். இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய காலம் மலர்ந்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி ஒவ்வொரு இன மக்களையும் நெருக்க முடியாது.

அனைத்து தரப்பினரிலும் அடிப்படை வாதக்கொள்கையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இங்கிலாந்தில் போன்று அடிப்படைவாதக் கொள்கையுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கத்தோலிக்கர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் அவர்களை சுவற்றுக்கு சேர்த்து நெருக்க முடியாது. பௌத்தர்களுக்கு மத்தியில் ஞானசார தேரர் போன்று அனைத்து இனங்களிலும் அடிப்படை வாதக்கொள்கை உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை புனர்வாழ்வளிக்க வேண்டும். இது குறித்து அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தொடர்ந்தும் கும்பல்களை உருவாக்கி அவற்றின் ஊடாக பிரச்சினைகளை வளர்த்து மக்களை முட்டாள்களாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...