உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட் 19 தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் 10 பேர் கொண்ட குழுவில் இவர் உள்ளடங்குகிறார்.இக் குழு இரண்டு வருடங்களுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.