உலக புகழ்பெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலை பிரதமருக்கு வழங்கிவைப்பு

Date:

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் வழங்கப்பட்டது.

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் 7, 8ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகும். அவலோகிஸ்வரர் போதிசத்துவரின் கருணை, தயவு ஆகிய குணங்களை சித்தரிக்கும் வகையில் இச்சிலையின் தோற்றம் அமைந்துள்ளது.

இடது காலை கீழே வைத்து இடது கையை தரையில் வைத்துக் கொண்டு வலது கையில் விதர்க்க முத்திரையை கொண்டதாக இச்சிலை விளங்குகிறது. இச்சிலையில் காணப்படும் கலை அம்சங்கள் காரணமாக அது உலகப் புகழ் பெற்று விளங்குவதாக பேராசிரியர் கபில ரணசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனரான கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட சுவரோவியம், வாஸ்து, சிற்ப தொல்பொருளின் நூற்றாண்டை முன்னிட்டு மத்திய கலாசார நிதியத்தினால் அச்சிடப்பட்ட 100 புத்தகங்களை கொண்ட நூல் தொகுதியில் சிவ மூர்த்தி நூலும் உள்ளடங்குகிறது.

மத்திய கலாசார நிதியத்தின் ஊடக பணிப்பாளர் லலித் உதேஷ் மதுபானு அவர்களினால் சிவ மூர்த்தி நூல் இதன்போது கௌரவ பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, மத்திய கலாசார நிதியத்தினால் இந்நாட்டின் வாசகர்களுக்காக விசேட தள்ளுபடியுடன் கூடிய சலுகை விலையில் இணையவழி ஊடாக புத்தகங்கள் மற்றும் மாதிரிகளின் விற்பனை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...