எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து

Date:

எரிபொருளின் விலையை எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (11) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினைகள் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி ஆகிய குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அமைச்சரவைக்கு தெளிவூட்டியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, இந்த தருணத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும், எரிபொருளுக்கான நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...