ஒரு கிலோ அரிசி ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்-அமைச்சர் பந்துல குணவர்தன!

Date:

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...