ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலி!

Date:

வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் இவ்வாறு வபாத்தாகி உள்ளார்கள்.இவர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்கின்ற அதேவேளையில் பொறுமையிழந்த நிலையில் பொதுமக்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு வருவதையும் இதன் பின்னனியில் விபத்துக்கள் நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்வதன் மூலம் விரும்பத்தகாத விடயங்களிலிருந்து நம்மையும், நாட்டையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...