சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி20போட்டிகளில் சாத்தியமானவை- இலங்கை அணிக்கான வெற்றிவாய்ப்பு குறித்து முரளீதரன்

Date:

சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி20போட்டிகளில் சாத்தியமானவை என முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலககிண்ணப்போட்டிகளில் சாதிக்கும் என எவரும் கருதாத ஒரு சந்தர்ப்பத்தில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் இலங்கைக்கான வாய்ப்புகளை முற்றாக நிராகரிக்க தவறியுள்ளார்.
எனினும் 1996 இல் உலக கோப்பையை வென்ற தான் விளையாடிய அணியுடன் ஒப்பிடும்போது இந்த அணி திறமை குறைவானது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்ள்ளார்.

நீங்கள்இது சாத்தியமில்லை என கருதலாம் ஆனால் சாத்தியமற்ற விடயங்கள் கிரிக்கெட்டில் சாத்தியமாகியுள்ளன என அவர்தெரிவித்துள்ளார்.
ரி20 போட்டிகளில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1996 இல் நாங்கள் வென்றதை போல இந்த முறை எந்த அணி வெற்றிபெறும் என்பது தெரியாது நாங்கள் வெற்றிபெறுவோம் என அன்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
நான் அந்த தொடரில் விளையாடினேன் நாங்கள் அனேக போட்டிகளில் தோற்போம் என்றே நான் நினைத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள்இறுதிப்போட்டிக்கு செல்வோம் என நினைக்கவில்லை ஆனால் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் நாங்கள் இறுதிப்போட்டிக்கு சென்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அணி போன்று திறமைவாய்ந்த அணி தற்போதுள்ளது என நான் தெரிவிக்கவில்லை ஆனால் கிரிக்கெட்டில் சாத்தியமற்ற விடயங்களை சாதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மகேலஜெயவர்த்தன ஆலோசகராக செயற்படுவதால் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை வெற்றிபெறும் என முரளீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மகேல ஜெயவர்த்தனவின் பிரசன்னம் பெரிய விடயம்,கடந்த ஆறு ஏழு வருடங்களாக இந்த இளைஞர்களிற்கு எந்த வித வழிகாட்டுதல்களும் இல்லாதநிலை காணப்படுகின்றது அவர் குறுகிய நாட்களிற்கே வழிகாட்டியாக செயற்படப்போகின்றார் என்பது எனக்கு தெரியும் ஆனால் ரி20 போட்டிகளில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர், உலகின் எல்லாப்பகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்,இந்த போட்டிகளை எப்படி விளையாடவேண்டும் என்பது அவருக்கு தெரியும்,அவர் தனது அனுபவங்களை இலங்கை அணி வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதை பார்ப்பது சிறப்பான விடயம் என முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...