டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்

Date:

நாட்டில் பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக செயற்பட்டு குறித்த இடங்களை டெங்கு துளம்புகள் அற்ற இடங்களாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்கள் அதிகமாக டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் 2 வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது வதிவிடங்களை இடங்களை வைத்து கொள்ளுமாறு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...