பஸ் போக்குவரத்து பிரிவின் பணியாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்றமையினால், பஸ் போக்குவரத்து பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டமையினால், 50 ஆயிரம் பஸ் பணியாளர்களில் 30 ஆயிரம் வரையிலானவர்கள் சேவைக்கு வரவில்லை என்று விசேஜரத்ன தெரிவித்தார். நீண்ட நாட்களாக வருமானம் எதுவும் கிடைக்காமையினால் அவர்கள் வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதையடுத்தே இந் நிலைமை உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தனியார் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், மாகாணங்களுக்குள் பயணிக்கு 6, 800 பஸ்களில் 800 பஸ்களே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.