போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை நாட்டில் செயல்படுத்த அனைத்து மதத் தலைவர்களும் கைகோர்த்துள்ளனர்!

Date:

நீண்டகாலமாக தொழிற்படாதிருந்த போதை ஒழிப்புப் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அனைத்து மதத் தலைவர்களும் புத்த சாசன கலாச்சார அபைச்சில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.இந் நிகழ்வை தேசிய போதை ஒழிப்பு செயலணி ஏற்பாடு செய்திருந்தது.இதன் இணைப்பாளரான தேசபந்து நளின் அமரசிங்க கலந்து கொண்டார்.இந் நிகழ்விற்கு பிரதமரின் பெளத்த விவகார இணைப்பாளரான கெளரவ அக்ரஹானே கஸ்ஸப்ப நாயக சுவாமி வஹன்ஸ , இஸ்லாம் மதத்திற்கான பிரதமரின் இணைப்பாளரான அல்ஹாஜ் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா ,இந்து மதத்தின் பிரதமரின் இணைப்பாளரான, கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள் , கிறிஸ்தவ மதத்திற்கான பிரதமரின் இணைப்பாளரான , கலாநிதி ஷிஷ்டர் குருகுலசூரியவின் பிரதிநிதியாக ஜுட் பர்னாட் அருட் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத ஆராதனைகளை தொடர்ந்து முதலாவதாக கெளரவ கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப நாயக தேரர் உரையாற்றினார்.
“தற்போது இலங்கையில் அதிகளவான குடும்பங்களின் ஒற்றுமை சீர்குலைவதற்கு இப் போதைவஸ்துக்கு அடிமையாதல் பிரதான காரணமாக உள்ளது.இதனால் இப் பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாக்க வேண்டியது எல்லோருடைய கடமையாகும் என தனது உரையில் தெரிவித்தார்.

கலாநிதி சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள் உரையாற்றுகையில்,
இந்த போதைவஸ்துக்குள்ளான வடக்கு,கிழக்கு இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுக்க அப் பிரதேசத்திற்கு கள விஜயங்கள் மேற்கொண்டு விழிப்புணர்வு வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பை நான் தருவேன் என்று தெரிவித்தார்.

கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா அவர்கள் உரையாற்றுகையில்,
” இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் ஒன்றினைந்து செயல்படுவது மகிழ்ச்சி யளிக்கிறது.மதத் தலைவர்கள் மூலமாக நாட்டில் உள்ள இளைஞர் சமுதாயத்தை காப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என அவர் கூறினார்.

ஜுட் பர்னாட் அருட் தந்தையும் தனது முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் இச் சந்தர்ப்பத்தில் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் நோக்கத்தை இவ் அமைப்பின் இணைப்பாளர் தேசபந்து நளின் அமரசிங்க விளக்கும் போது, இந்த திட்டம் நீண்டகாலமாக தொழிற்படாது இருந்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முகநூல், யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள்,வயோதிபர்களை முக்கியத்துவப்படுத்தி மதத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் எதிர் வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதியிலிருந்து முகநூல் வாயிலாக நேரடி ஒளிபரப்பின் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஊடகப் பங்களிப்பை Newsnow இணையத்தளமும் வழங்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...