கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டது.
கொவிட் பரவலிலிருந்து நாட்டை காப்பாற்றி வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டில் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.