மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி நீக்க தீர்மானம்!

Date:

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நேற்றைய தினம் (21) வரையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...