JUST IN:வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Date:

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று (01) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று (30) தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.இதனையடுத்து, சுமார் 3 மாதங்களுக்கு வெள்ளை சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...