அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி மேலும் இரு தினங்களுக்கு நீடிப்பு!

Date:

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 2021ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சியொன்று அக்கரைப்பற்று மாநகரில் கடந்த 05ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இப் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளரும், ஆய்வாளருமான சிராஜ் மஸுர் தலைமையில் அக்கரைப்பற்று AIMS சர்வதேச பாடசாலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெற்று வருகிறது.நாளை இறுதி தினமாகும்.

இப் புத்தகக் கண்காட்சியில் பல இலக்கியவாதிகள் உரையாற்றவுள்ளதுடன் பல நூல்களும் வெளியிடப்பட்டன.அத்தோடு அகில இலங்கை ரீதியில் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப தினத்தில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர்களான ஏ.எம் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் யோ . ஜெயச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாகவும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் மெளனகுரு விசேட சொற்பொழிவாற்றியதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இரண்டாவது நாளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் பேராசிரியர் செ .யோகராசா , தென்கிழக்கு பல்கலைக்கழக கலை பீடாதிபதி எம்.எம் பாசில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
இன்றும் நாளையும் (8&9) புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...