அருஸீய்யத்துல் காதிரிய்யாவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இன்று (26) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களுக்கிடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமரின் முஸ்லிம் மத விவகார இணைப்பாளரான கலாநிதி செய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, ஆன்மீகத் தலைவரின் ஏற்பாட்டுக் குழு தலைவர் அல்ஹாஜ் முஹீதீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் முயூனுதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக தலைவரின் விஜயத்திற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை Newsnow ஊடகப் பிரிவு வழங்குகிறது.