திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் தற்போது கிண்ணியா நகர சபை தவிசாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.