சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் பி.எம் அம்சா நற்சான்றிதழ்களை கையளித்தார்!

Date:

சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பி.எம் அம்சா தனது நற்சான்றிதழ்களின் பிரதியை உபசரணை விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலித் பின் பைஷல் அல் சிஹ்லியிடம் நவம்பர் 2 ஆம் திகதி சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

நிமயனம் செய்யப்பட்ட தூதுவரின் புதிய நியமனத்தை அன்புடன் வரவேற்று வாழ்த்தி உரையாற்றிய பிரதி அமைச்சர் காலித் பின் பைசல் அல் சிஹ்லி, தூதுவர் அம்சாவின் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் செழிப்படையும் என சவூதி அரேபியா நம்புவதாகத் தெரிவித்தார்.

தன்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்தமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தூதுவர் அம்சா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தான் உழைக்கப் போவதாகவும்,சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.

நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் போது பிரதியமைச்சருடன் கலந்துரையாடல்கள் சுமுகமான வகையில் இடம்பெற்றது. சான்சரியின் தலைவர் துல்மித் வருணவும் தூதுவருடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கை தூதரகம்,ரியாத் 

05.11.2021

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...