சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று

Date:

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்றில் இலங்கை கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இலங்கை கால்பந்து அணி கடைசியாக 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இத்தகைய திறமையை வெளிப்படுத்தியது.

சர்வதேச தரவரிசையில் இலங்கை கால்பந்தாட்ட அணி 204வது இடத்திலும், சீஷெல்ஸ் அணி 199வது இடத்திலும் உள்ளது.இன்றைய போட்டியில் இலங்கை கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றால், 25 வருடங்களின் பின்னர் சர்வதேசப் போட்டியொன்றை வெல்வது இதுவே முதல் தடவையாகும். இலங்கை கால்பந்து அணி கடைசியாக 1995 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றது.அந்த ஆண்டு இலங்கை நடத்திய தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இலங்கை வென்ற கடைசி சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் பிரதம அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள்...

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...