கொவிட் நான்காவது அலை ஜேர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரம் ஒரு நாளில் 75 ஆயிரத்தை கடந்த புது தொற்றாளர்கள் உச்சம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் கொவிட் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.