தமிழர்களை விட இஸ்லாமியர்களே எங்களை அதிகம் ஆதரிக்கிறார்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

Date:

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் , முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெருமளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று (24) டொராண்டோ நகரில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.சில இஸ்லாமிய அரசியல்வாதிகளிடம் ஒரு கருத்து இருக்கின்றது அதாவது, இவர் என்ன எங்களுடைய பிரச்சினைகளை கதைக்கின்றார் ,எங்களுக்காக பேசுகின்றார் என்கின்றனர்.எனினும் நான் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றேன்.

அதிலும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் அதி வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெரிதளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போவதில்லையென அது உண்மை தான்.என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளுக்காக எதனையும் செய்யவில்லை.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் , இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின் எதிர்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து விடும் என்றார்.

https://m.facebook.com/story.php?story_fbid=442090857284912&id=100044520053805

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...