நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Date:

மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துறைப்பு நிறுவனத்தின் பூரண நிதி அனுசரணையின் கீழ் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முழ ஆதரவுடன் புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமாகும். நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை முற்றாக திறுத்தியிருந்தது. அதன்படி இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இறக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 48 . விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...