நாட்டில் வெள்ள அபாயம் | கடலுக்குச் செல்ல வேண்டாம் யாழ் மாவட்ட மக்களிடம் கோரிக்கை

Date:

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாளங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்படலாம் என நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் புளத்சிங்கள, பதுரலிய, பாலிந்தநுவர, மில்லனிய, ஹொரண, தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம் | யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை

எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்ப்பாண மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை தான் யாழ்ப்பாண மாவட்டத்திலே பெய்துள்ளது.
இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.யாழில் அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கின்ற தாழமுக்க நிலையானது மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் அந்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையிலே கடல் சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றோம் – என்றார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...