நிந்தவூர் அல்-அஷ்ரக்கில் இருந்து 48 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு!

Date:

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 வருட காலத்தில் இருந்து மாணவர்களின் பல்கலைக்கழக உட்பிரவேசம் அதிகரித்து வருகின்றமை இப்பாடசாலைக்கு நாடளாவிய ரீதியில் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளது.

இதற்காக உழைத்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், அண்மைக்காலமாக சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, பாடசாலையின் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பான முன்னேற்றத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கின்ற கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...