நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று மாலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா பிலக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்க ளுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத் துவதற்கான வேலை ஆரம்ப்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.