பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்!

Date:

பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.எனினும் இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர் . நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் , விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வந்தது, நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...