பார்படாஸ் தீவு குடியரசு நாடாக மலர்ந்தது!

Date:

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத் ராணியே அந்நாட்டின் தலைவராக நீடித்தார். அந்த முறையை மாற்றி, பார்படாஸ் சுதந்திர குடியரசாக மாறுவதாக, நாட்டின் முதல் அதிபரான சாண்ட்ரா மேசன் அறிவித்தார். தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இதற்கான விழா, பார்படாஸ் நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன், உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந் நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்படாஸ் நாட்டின் அரசியல் சட்டம் மாறினாலும், இரு நாடுகள் இடையே நட்புறவு தொடரும், குறிப்பிட்டார். 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் பார்படாஸ் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/29/barbados-set-to-become-a-republic-ditching-british-queen&ved=2ahUKEwim6vW7ysD0AhUaSmwGHdtpBiAQFnoECEMQAQ&usg=AOvVaw2Qr1Dq1XMzR7f6QIwcDkNa&ampcf=1

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...