புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 22,217 குடும்பங்களைச் சேர்ந்த 78614 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள அதேநேரம் தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.21 தற்காலிக முகாம்களில் 1637 குடும்பங்களைச் சேர்ந்த 5234 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பிரதேச செயலகங்களூடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , குறித்த வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணமல் போயுள்ளனர்.காணாமல் போன இருவரையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வருகின்றன.கடந்த திங்கட்கிழமை பெய்த அடை மழையினால் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து வீதிகளை புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க முப்படையினர் களத்தில் இறங்கி வாகன நெரிசலை நேற்று (09) காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா,ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...