பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தின் இறுதி நிகழ்வு!

Date:

நேற்று (22) சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள பங்கதெனியாவில் அமைந்திருக்கின்ற அனன்தய ரிஸோர்ட் ஹோட்டலில் பெண்களுடைய பங்கேற்புடன் சமூக ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் என்ற திட்ட முடிவு நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி இடம்பெற்றது.இந்த நிகழ்வில் வட மேல் மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு , வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண செயலாளர் , புத்தளம் மாவட்ட செயலாளர் ,வட மேல் மாகாண சபையின் கமிஷனர் உட்பட இந் நிகழ்வை ஏற்பாடு செய்த யூ. என் பெண்கள் அமைப்பின் இணையமைப்பாளரான கிரிஸ் எலிஸ் என்ற அமைப்பின் பிரதம நிர்வாகி உட்பட மேலும் பல பிரமுகர்களுடன்,பிரதேசத்தை சேர்ந்தவர்களும் , மதகுருக்களும் கலந்து கொண்டார்கள்.

 

இந்த நிகழ்ச்சித் திட்டமானது, வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் , மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மத்தியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தினூடாக சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.அதாவது திண்மக் கழிவுப்பொருட்களை மீள் சுழற்சி செய்து அதன் மூலம் சூழலை பாதுகாப்பதும்,அப் பொருற்களை பயனுள்ளதாக மாற்றுவது போன்ற வேலைத் திட்டத்தினூடாக இதிலே சிங்கள, தமிழ் மக்களை ஒன்றிணைத்து செய்வதனூடாக சமூக ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்புவதும், இதற்கு பிரதான பெண்களுடைய பங்களிப்பை வழங்குவது இத் திட்டத்தின் குறிக்கோளாகும்.

எனவே இந்த நிகழ்ச்சி சமூக ஒருமைப்பாட்டை பேணுகின்ற அதேநேரத்தில் சமூகத்திலே சுகாதாரம், சூழல் பாதுகாப்பு போன்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு வேலைத்திட்டமாகும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வே இதுவாகும்.இந் நிகழ்வின் முக்கிய அம்சங்களாக திண்மக் கழிவு தொடர்பான குறுந்திரைப்படம் ,பெண்களுடைய பங்களிப்பை வெளிக்காட்டும் காட்சிகள் உட்பட மேலும் பல விடயங்கள் அரேங்கேற்றப்பட்டது .குறிப்பாக இத் திட்டத்தில் பங்குகொண்ட பல பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

அதேபோன்று இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக திண்மக் கழிவு முகாமைத்துவத்தினூடாக பெண்களால் செய்யப்படுகின்ற கைப்பணிப் பொருற்கள் சம்பந்தமான அழகிய கண்காட்சியும் நிகழ்ச்சி இறுதியிலே இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சி சமூக மத்தியில் பெண்கள் தங்களுடைய பங்களிப்பையும்,சமூக ஒருமைப்பாட்டினையும் , திண்மக் கழிவு முகாமைத்துவத்திலும் அவர்களால் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...