பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.