அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது.
மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியுள்ளனர் . இதனையடுத்து 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 km தூரத்திற்கு உருக்கு (எஃகு) வேலி அமைக்கும் பணி அங்கு இடம்பெற்று வருகிறது.அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் இப் பணிகளை முடிக்கவும், எல்லையில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.