அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24,25,26 ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 27 தொடக்கம் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் மேற்படி தினங்களில் சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.