ஆன்மிகத் தலைவர் அஷ்-ஷெய்க்ஹ் அப்ழலுல் உலமா அல்லாமா டாக்டர் தைக்கா அஹமத் நசீர் ஆலிம் அவர்கள், தம் அன்புத் தந்தையும், அரூஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீக தலைவருமான, குதுபுஸ் ஸமான் அஷ்-ஷைகுல் கமில் அப்ழலுல் உலமா அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐப் ஆலிம் வலியுல்லாஹ் – ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவுக்குப் பிறகு, அரூஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவராகப் பதவியேற்றார்.
2021 நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை முதல் 2021 நவம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை வரை, அவர்கள் இலங்கையில் தங்கி இருப்பார்கள்.
ஆன்மீக தலைவராக உத்தியோக பூர்வமாக பதவியேற்றதன் பின் அவர்கள் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தருகிறார்கள்.அவர்களின் இந்த விஜயத்தின் போது இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று அரூஸிய்யத்துல் காதிரீய்யா தரீக்காவின் முரீதீன்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள், ஏனைய பிரமுகர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்கள்.
இப்படிக்கு,
அல்-ஹாஜ் முஹிதீன் காதர்,
தலைவர்:
ஏற்பாட்டுக் குழுத,
அரூஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின்
கிளை – இலங்கை.