வரலாற்று சிறப்பு மிக்க அரூசியத்துல் காதிரியா இலங்கை தலைமையகமான கொழும்பு 10 இல் இருக்கும் அல் மஸ்ஜிதுல் புகாரி தக்யாவில் அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் அதி சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்களுக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆன்மீகத் தலைவர் விசேட உரை நிகழ்த்தினார். பிரதமரின் கிறிஸ்தவ மத இணைப்பாளரான அருட் தந்தை கலாநிதி ஷிஷ்டர் குருகுலசூரிய அவர்கள், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹசன் மெளலானா அவர்கள் மற்றும் அஹ்மத் ஷா மெளலவி ,அல் ஆலிம் பைசல் காதிரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் எஸ்.ஐ காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாகிர் மெளலானா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரதி மேயர் எம்.டி எம் இக்பால் , ஏனைய உலமாக்கள்,முரிதீன் ,முஹீதீன்கள் உட்பட பல பிரமுகர்களும் ,சுப்ரின் கவுன்சில் ஒப் சூபி தரீக்காவினுடைய தலைவர் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஊர் மக்கள் இன மத பேதமின்றி இமாமுல் அரூஸ் மாவத்தையில் ஒன்று சேர்ந்து ஆன்மீக தலைவர் அவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக தலைவரின் விஜயத்திற்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை Newsnow ஊடகப் பிரிவு வழங்குகிறது.