அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர்  மற்றும் போதாகம சந்திம நாயக்க தேரருக்கும் இடையில் சந்திப்பு

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்-ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இன்று 25 களனியில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் பிரதானி, ஜனாதிபதியின் சர்வதேச மத மற்றும் கலாசார விவகார ஆலோசகர் வணக்கத்திற்குரிய போதாகம சந்திம தேரரை சந்தித்தார்.

இச் சந்திப்பில் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதனை அடுத்து ஆன்மீக தலைவருக்கு விசேட விருந்தினருக்கான விருதை வழங்கி கெளரவித்தனர்.

மேலும், இந்த சந்திப்பின் போது,ஆன்மீகத் தலைவரின் ஏற்பாட்டுக்குழு தலைவர் அல்-ஹாஜ் முஹிதீன் காதர்,மற்றும் ஏற்பாட்டுக்குழு  ஒருங்கினைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுதீன் பின் முஹம்மத்  ஆகியோரும் இந்த சந்திப்பின்போது இணைந்து கொண்டனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...