அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 3000 பேர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்பர்னில் 9 மாதங்கள் கொவிட் ஊரடங்கு அமுலில் இருந்தது.அங்கு வசிக்கும் 80% மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் தளர்த்தப்பட்டது.எனினும் உணவகங்கள், அரங்கங்கள் மற்றும் அலுவலகங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் இப் பேரணியை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.