ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று (02) காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹாக், 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மீது மனித வெடிகுண்டாக சென்ற நபர், ஆயுதமேந்தியவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.
இந் நிலையில், ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மருத்துவமனைக்கு வெளியே வெடிக்கச்செய்ததில் பலர் உயிரிழந்ததாக தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.