ஆப்கானிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானில் தலிபான்களையும் , சிறுபான்மை ஷியா பிரிவையும் குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந் நிலையில் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இரண்டு குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியதோடு மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இது வரையில் இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.