இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 இருபதுக்கு இருபது தொடரோடு முடிவடைவதால் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.