இந்தோனேஷியா தூதரகத்தின் ஏற்பாட்டில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு ஒன்று இன்று ( 21) கிண்ணியாவில் நடைபெற்றது.
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற நடனம் மற்றும் பாரம்பரிய இசைக் கருவியான மூங்கிலால் ஆன இசைக்கருவியை இசைத்தல் போன்ற நிகழ்வுடன் இலங்கை திருகோண்ணாமலை கிண்ணியா பிரதேசத்தில் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு பாடல்கள், மற்றும் தகரா பாவா பாடல்கள் சீனடி விளையாட்டு என்பனவற்றை இரு நாடுகளுக்கான கலாச்சார நிகழ்வாக பகிர்ந்து கொண்டன.
இந்தோனேஷியா நாட்டுக்கான முன்னாள் தூதுவர் ஏ எல் எம் லாபிர் தலைமையில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மூங்கில் ஆன இசை எழுப்பும் கருவிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினால் இந் நாட்டிற்கான பாரம்பரிய இசை என்ற அங்கீகாரத்தை பெற்ற மூங்கிலால் ஆன இசைக்கருவியை இசைத்து காட்டினர்.
மேலும் இந்தோனேசியா நாட்டின் பிரபல நடனங்களும் ஆடி காட்டப்பட்டன இந் நிகழ்வில் பேராசிரியர்கள் புத்திஜீவிகள் கலை இலக்கியவாதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் இந்தோனேசிய நாட்டின் பிரதி தூதுவர் உம் கலாச்சார நிகழ்வின் பிரதம உத்தியோகத்தரும் ஆன ஹிரோ பிரே இட் நோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வில் நினைவுச் சின்னங்களும் பரஸ்பரமாக பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.