இன்றும் நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக் கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்.