நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பிரதேசங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.