உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 33பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல் நிலைய கட்டடம் அருகிலும் நடந்த குண்டு வெடிப்பில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீப்பற்றி எரியும் வீடியோ வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பொது மக்களை மீட்டெடுக்கும் பணிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.