ஐக்கிய இளைஞர் சக்தியின்  அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Date:

எம்.எஸ்.எம்.ஸாகிர்

ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று

நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட செயலாளரும்,அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி கல்வி, ஊடகம், விளையாட்டு, கலாசாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் றிஸ்கான் முகம்மட், தவிசாளரிடம் கையளித்ததுடன் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினார்.இந் நிகழ்வில், பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆஷிக் சுபையிரும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...