ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிப்பதாக சிறுபான்மை கட்சிகள் அறிவிப்பு!

Date:

” ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயல்பாட்டை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் செயலணி நாட்டில் ஒற்றுமையின்மையையையும் , பிரிவினையையும் ஏற்படுத்தி பாரிய ஆபத்தை கொண்டிருப்பதாகவும் எனவே இதனால் தாங்கள் முற்றாக எதிர்ப்பதாக சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் பேசும் சிறுபான்மை கட்சித் தலைவர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (2) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ள அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திபடுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில் எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் . அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...